யேர்மனியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு

15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு  யேர்மனி போகும் நகரில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.


 தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில்  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் வரிசையாக வந்து உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

பின் பல கலை நிகழ்வுகளுடன் சிறப்புரையும் நிகழ்ந்தது இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

No comments