வெட்டுவோமென்கிறார் கூட்டமைப்பின் உபதவிசாளர்?


பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த 13ம் திகதி வியாழக்கிழமையன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் தொலைபேசியில் தம்மை எச்சரித்ததாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. பிறேமி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அண்மையில் கூட்டமைப்பு வசமுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments