மைத்திரி ஆட்களிடமே முக்கிய அமைச்சுக்கள்?


ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவையில் தனது சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக்க மைத்திரி முடிவு செய்துள்ளதாக இரவு கிடைத்த கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகக்குறைந்தது பத்து வரையிலான முக்கிய அமைச்சுக்களை தன் கட்சியினரிடம் வைத்துக்கொள்ள மைத்திரி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் இன்றிரவு தனது கட்சியினருடன் அவர் விவாதித்ததாக தெரியவருகின்றது.புதிய அமைச்சரவையில் ஜக்கிய தேசியக்கட்சி வசம் ஏதும் பிரயோசனமற்ற அமைச்சுக்களே செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஒன்றிற்கான ஆண்டாகவுள்ளதால் அரச வளங்களை பயன்படுத்த மைத்திரி திட்டமிட்டு நகர்வுகளை செய்வதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணியில அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து, புதிய கூட்டணி ஒன்றில் பயணிக்கவுள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியிருக்கிறார். தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணியே உருவாக்கப்படவுள்ளது.

.

No comments