மீண்டும் திறக்கப்பட்டது இரணைமடு வான்கதவுகள்?


மீண்டும் இன்று காலை முதல் தொடரும் அடை மழை காரணமாக இரணைமடுவின் 9 வான்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதனால் தாழ்நில மக்கள் குறிப்பாக கோரக்கண்கட்டு, சேற்றுக்கண்டி, முரசுமோட்டை, ஊரியன், உடுப்பாற்றங்கண்டல், கண்டாவளை, பெரியகுளம் மக்கள் கவனமாக இருக்க கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெள்ளம் வடிய தொடங்கியிருந்ததுடன் இரணைமடு வான்கதவுகள் பூட்டப்பட்டுமிருந்தது.

எனினும் மீண்டும் தொடரும் மழை காரணமாக குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து இரணைமடுவின் 9 வான்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ். மணியந்தோட்டம் பகுதியில் குளத்தில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசன் குலேன் (வயது 46) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

No comments