வெள்ளம் பாதித்த மக்களை துரத்துகின்றன யானைகள்?


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கின் எல்லைக்கிராமமான காஞ்சூரமோட்டை கிராமத்தை காட்டுயானைகளும் விட்டுவைக்கவில்லை.

வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களான காஞ்சூரமோட்டை மற்றும் ஊஞ்சல்கட்டி அண்மைய வெள்ள பாதிப்பினை சந்தித்துள்ளது.

குறிப்பாக நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராமத்தில் உள்ள அனைத்து தற்காலிக வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் 10 குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் மருதோடை அ.த.க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மக்கள் வெளியேறியுள்ள நிலையில் அவர்களது வீடுகளை நேற்றிரவு யானைகள் தாக்கியுள்ளன.

ஏற்கனவே இப்பகுதியில் வன இலாகா திணைக்களத்தினால் தென்னிலங்கையிலிருந்து யானைகள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments