வலி.வடக்கு காணி விடுவிப்பு கைவிடப்பட்டது?


சுனாமி நினைவேந்தல் நாளான இன்று படையினரது ஆக்கிரமிப்பிலிருந்து ஒரு பகுதி காணி விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்நிகழ்வு நடைபெறவில்லை.

வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி இன்று (26) விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி இந்நிகழ்வில் பங்கெடுக்க ஆர்வமற்றிருந்த நிலையில் இது இரத்து செய்யப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யாழ்.பல்கலையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments