வீடு - ஈபிடிபிக்குமில்லை! கூட்டமைப்பிற்கும் இல்லை!


யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான , பாதிப்புற்ற குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டு இனங்கானப்படுபவர்களிற்கு மட்டுமே வீட்டித் திட்டம் வழங்கப்படுமென யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் மஹிந்த அமைச்சரவையின் அமைச்சராக இருந்திருந்த டக்ளஸ் தேவானாந்தாவும் அவரது கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.அத்துடன் பிரதேச செயலகங்களில் வீட்டுத்திட்டம் கோரி மேற்கொண்ட பதிவுகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தம்மால் வழங்கப்படும் பட்டியலின் பிரகாரமே எதிர்காலத்தில் வீட்டுத் திட்டம் சிபார்சு செய்யப்படும் என ஈபிடிபி கட்சி கூறிவருகின்றமை தொடர்பில் மாவட்டச்செயலர் கருத்து வெளியிட்டுள்ளார். 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீட்டு வசதிகள் அற்றவர்கள் வீட்டுத் திட்டம்கோரி பிரதேச செயலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விபரம் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்படும் அதற்கு அடிப்படையில் மாவட்டத்திற்கு கிடைக்கும் வீடுகளில் இருந்து தகமையின் அடிப்படையில் நியாயபூரவமான காரணங்களிற்கு தகமையின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் . ஆனால் எந்த அரசியல் வாதிகளின் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது என்பதனை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்.

முன்னதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய வீடமைப்புக்கென தமது ஆதரவாளர்களிடம் பட்டியல்களை கோரியிருந்தனர்.எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதனை டக்ளஸ் தனது கைகளில் எடுத்துக்கொண்டுள்ளார்.

No comments