காலை ஆர்ப்பாட்டம்:மாலை குண்டுவீச்சு!


இன்று காலை சுன்னாகம் காவல் நிலையத்திற்கெதிராக புலம்பெயர் உறவொருவரது காணியை சுவீகரிப்பதற்கெதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் இன்றிரவு அந்த காணிக்குள் உள்ள உடற் பயிற்சி கூடத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

தனியார் ஒருவருக்கு சொந்தமானதும் குறித்த காணியினுள் இயங்கி வந்ததுமான உடற்பயிற்சி கூடத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு தீப்பற்றி குறித்த கட்டடம் இயங்குவதாக சொல்லப்படுகின்ற போதும் சுன்னாகம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தர மறுத்துள்ளது.

இலங்கை காவல்துறைக்கான நிலையமொன்றை அமைப்பதற்காக குடிமனைகளிற்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய சுன்னாகம் பகுதியினை சேர்ந்த மக்களே ஆர்ப்பாட்;டத்தை நடத்தியுள்ளனர்.

சித்திரவதை, கொலை போன்று மனிதத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சுன்னாகம் காவல்துறையினர்; பொது மக்களின் குடிமனைகளுக்கு நடுவில் நிலை கொள்ள வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டிருந்தது. 

சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்போது காவல் நிலையத்தினை இயக்கிவரும் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறைக்கு மாற்றுக் காணியை வழங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் ஒதுக்கப்பட்ட காணியினை காவல்துறை நிராகரித்துள்ளது.

அதற்கு பதிலாக சுன்னாகம் பகுதியில் புலம் பெயர் நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள பொது மகன் ஒருவருடைய 14 பரப்பு காணியை தருமாறு கோரி வருகின்றனர். 

இதன்படி அக் காணியை சுவீகரித்து ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சுன்னாகம் பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments