68 அடி உயரமான கிறிஸ்மஸ் ?


யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள புனிதமிக்கல் ஆலய பங்கு இளைஞர்களின் அயராத முயற்சியினால் 68 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தென்னம் ஈர்க்குகள், சம்பு புற்கள், கயிறு, எஸ்லோன் பைப் மற்றும் 160 வண்ண மின் விளக்குகள் கொண்டு இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் யேசுநாதரின் பிறப்புக்களை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள், சாண்டோபாப்பா, சிறுவர்களை மகிழ்விக்கும் வகையிலான பல்வேறு வினோத வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எட்டு அடுக்குகள் கொண்ட இந்த அலங்கார கிறிஸ்மஸ் மரத்தை ஆலய பங்குத்தந்தை அருட்பணி எம்.பத்திநாதர் உத்தியோகபூரவமாக திறந்துவைத்தார்.

No comments