மஹிந்தவிற்கும் வன்னியால் கவலை!


எதிர்க்கட்சி தலைவர் பதவி தனக்கேயென இரா.சம்பந்தன் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்க உண்மையான எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவோ நேற்றைய தினம் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளாராம்.

வன்னியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அப்போது கேட்டறிந்ததாக மகன் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.அத்துடன் பாதிப்பு தொடர்பான விபரங்களை தமக்கு அனுப்புமாறும் கோரியதுடன் ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடி உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச தனது குழுவினருடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லவுள்ளதாக தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

No comments