தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை - ஐதேக

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யும் செய்­து­கொள்­ள­வில்லை. எங்­க­ளின் ஜன­நா­ய­கப் போராட்­டத்­துக்கு அவர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரும், நாடா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார் .

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யில் இர­க­சிய ‘டீல்” உள்­ளது. இதன் கார­ண­மா­கவே கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது என்று மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில தெரி­வித்­தார்.

அதே­வேளை, தமி­ழீ­ழத்தை வழங்க ஐக்­கிய தேசி­யக் கட்சி இணங்­கி­ய­மை­யி­னா­லேயே கூட்­ட­மைப்பு அவர்­களை ஆத­ரித்­தது என்று மகிந்த அணி­யின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்­துக்­க­ளுக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல, அல­ரி­மா­ளி­கை­யில் வைத்து நேற்­று­முன்­தி­னம் பதி­ல­ளித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி எந்­த­வொரு ஒப்­பந்­த­மும் செய்­ய­வில்லை. எங்­க­ளின் ஜன­நா­ய­கப் போராட்­டத்­துக்கு அவர்­கள் ஆத­ரவு வழங்­கு­கின்­றார்­கள்.


நல்­லாட்சி அர­சுக்கு தலைமை தாங்க வேண்­டிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கள்­ளர்­க­ளுக்­கும் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் தலைமை தாங்கி வரு­கின்­றார்.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணாக மகிந்­தவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்து சட்­டத்­துக்கு முர­ணாக புதிய அமைச்­ச­ரவை உரு­வாக்கி ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாக மைத்­தி­ரி­பால செயற்­பட்­டார்.

அந்த அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வந்து தற்­போது நாம் வெற்றி பெற்­றுள்­ளோம். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மக்­கள் விடு­தலை முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­கள் அர­ச­மைப்பு மற்­றும் ஜன­நா­ய­கத்­தைப் பாது­காப்­ப­தற்­காக எம்­மு­டன் இணைந்­துள்­ளன.

ஆனால், மகிந்த அணி­யி­னர் எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை தொடர்ந்து முன்­வைத்து வரு­கின்­ற­னர் – என்­றார்.

இதே­வேளை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் இடை­யில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சியை ஆத­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு சில நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தது.

அதனை எழுத்­தில் ஏற்­றுக் கொண்டு கடி­தம் வழங்­க­வேண்­டும் என்று கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தமை நினை­வில் கொள்­ளத்­தக்­கது.

No comments