மகிந்தவின் கையில் மீண்டும் மந்திரக்கோல் !

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்த ராஜ­பக்­ச­வின் கையில் புதி­தா­கத் தோன்­றி­யுள்ள மந்­தி­ரக் கோல் தொடர்­பில் பர­ப­ரப்­பான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. கடந்த ஒரு வார கால­மாக மகிந்­த­வின் கையில் மந்­தி­ரக் கோல் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
மகிந்த ராஜ­பக்ச சோதி­டத்­தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­ட­வர். தேர்­தல் திகதி உள்­ளிட்ட பல விட­யங்­க­ளை­யும் தனது சோதி­ட­ரு­டன் ஆலோ­சித்தே அவர் மேற்­கொண்­டார். மகிந்த ராஜ­பக்ச அரச தலை­வ­ராக இருந்த காலத்­தில் அவ­ரது கையில் கோல் ஒன்றை வைத்­தி­ருந்­தார்.
அதே­போன்று பல்­வேறு வர்ண கற்­கள் பொறித்த மோதி­ரங்­க­ளை­யும் அணிந்­தி­ருப்­பார்.
2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் தோற்ற பின்­னர் மகிந்த தனது கையில் அவற்றை எடுத்­துச் செல்­வ­தில்லை. கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி திடீ­ரென தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்­ன­ரும் கையில் எந்­த­வொரு மந்­தி­ரக் கோல்­க­ளை­யும் வைத்­தி­ருக்­க­வில்லை.
கடந்த சில வ◌ாரங்­க­ளா­கத் தொடர்ந்து அடிக்கு மேல் அடி வாங்­கு­கின்­றார் மகிந்த ராஜ­பக்ச. நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றம், அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு வெட்டு, ஆட்­சியை நடத்­து­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் தடை என்று அடுக்­க­டுக்­காக தோல்­வி­க­ளைச் சந்­தித்து வரும் நிலை­யி­லேயே, மகிந்­த­வின் கையில் மீண்­டும் மந்­தி­ரக் கோல் உலா­வத் தொடங்­கி­யுள்­ளது.
புலிப் பல்லை ஒத்த நீண்ட ஒரு மந்­தி­ரக் கோலை மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் கைக­ளில் கொண்டு திரி­கின்­றார். அவர் அத­னைக் கைக­ளில் வைத்­தி­ருக்­கும் ஒளிப்­ப­டம் சமூக வலைத் தளங்­க­ளில் பரவி வரு­கின்­றது.

No comments