வீதியைக் குறுக்கே கடந்த இருவருக்கு சாவகச்சேரி நீதிமன்று தண்டம்


பாதசாரிகள் கடவையைப் பயன்படுத்தாமல் வேறு இடத்தில் சாலையைக் கடந்த தாய்க்கும் மகளுக்கும் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று தலா ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் ாகுதியில் பாதசாரிகள் கடவை இருந்த போதும், அதனைத் தவிர்த்து சாலையில் கடந்த இருவருக்கும் எதிராக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்குகளை தனித்தனியாக விசாரித்த போது இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து இருவருக்கும் தலா ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.

No comments