விஜயகலாவின் வழக்கு - பெப்ரவரி 22 வரை ஒத்திவைப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments