ஹமாஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - நழுவியது சிறிலங்கா

பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா.

ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானம் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.

பொதுச்சபையின், 86 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. 57 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அதேவேளை, இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 33 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.

இந்த தீர்மானத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாததால் தோல்வியடைந்தது.

பலஸ்தீனத்தை நட்பு நாடு என்று சிறிலங்கா கொண்டாடும் நிலையிலும், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் சிறிலங்கா நழுவியுள்ளது.

No comments