இரணைமடுவின் நூற்றாண்டு வரலாற்றை உடைத்து அழித்த மைத்திரி

சுமார் 100 ஆண்டுகளைக் கொண்ட இரணைமடு குளத்தின் வரலாற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடித்தழித்து தலைகீழாக மாற்றியுள்ளார்.

இரணைமடு குளத்தின் கட்டுமானப் பணிகள், 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1922 ஆம் ஆண்டு தொடக்கம் நீர்ப்பாசன வசதிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் பின்னர், இரணைமடு குளம், சிறிலங்காவின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் உத்தரவின் பேரின்,   ஆண்டு  விவசாய அமைச்சராக  டட்லி சேனநாயக்கவின் மேற்பார்வையில் புனரமைக்கப்பட்டது.

எனினும், அதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராக இருந்த போது, 1954ஆம் ஆண்டு இந்தப் புனரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அப்போதைய காணி, காணி அபிவிருத்தி அமைச்சரான, புலங்குளமே திசாவவினால் திறந்து வைக்கப்பட்டது.

இது தொடர்பான நினைவுக் கல், சிறிலங்காவின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க,  டட்லி சேனநாயக்க மற்றும் இரணைமடுக் குளம் கட்டப்பட்ட காலப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கியதாக நாட்டப்பட்டிருந்தது.

இந்த நினைவுக்கல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.

இதன் பின்னர், 2130 மில்லியன் ரூபா செலவில் இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இதன்போது, அவரது பெயருடன் கூடிய நடுகல் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில், இரணைமடுக் குளத்தின்  வரலாற்றுக் காலம் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை, டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்கவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லும் அழிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments