ரணிலுக்கு கூட்டமைப்பு கைதூக்குமா?

இலங்கையின் பிரதமராக மீண்டும் ரணிலை கதிரையில் அமர்த்தும் முயற்சியின் ஒரு கட்டமாக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.எனினும் குறித்த பிரேரணையன்று பகிரங்க ஆதரவளிப்பதை தவிர்க்க ஜேவிபி அமர்வை புறக்கணிக்கவுள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு அனைத்து தரப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பகிரங்கமாக கூட்டமைப்பு நாடாளுமன்றில் ரணிலை ஆதரிக்குமா இல்லையாவென்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவ்வாறு ஜனாதிபதியை மாற்றியமைப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக விரோத – அரசமைப்புக்கு எதிரான ஆட்சிக்கெதிராகவே செயற்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments