சரவணபவனின் பி(எ)ச்சைக்கார அரசியல்
கொழும்பு அரசியல் குழப்பங்களை தமிழ் மக்களுக்கு சாதகமாக்கும் முயற்சியைக் கைவிட்டு தங்கள் பணப் பெட்டிகளை நிரப்புவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்த் தரப்பு ஆதரவளிக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்ச்சிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியிருந்தது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கான தமது ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவர முயற்சிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவிற்கான நிபந்தனையற்ற தமது ஆதரவுக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்றும் மகிந்தவிற்கான எதிர்ப்பு என்றும் பெயர் சூட்டிய கூட்டமைப்பு ரணிலிற்கு தமிழர் நலன்சார்ந்து நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக பணப்பெட்டிகளைக் கைமாற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு வெளிப்படையன ஆதரவு தெரிவித்து அதற்கான ஆவணத்தில் கூட்டமைப்பு கைஒப்பமிட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தது.
இவற்றின்போதெல்லாம் தானும் பங்குபற்றியதோடு மௌமாக இருந்து தனது பணப்பெட்டியை நிரப்புவதில் குறியாக நின்ற தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் குறித்த சந்திப்புக்களின் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை கைவிட்டு விட்டதாக தனது சொந்தப் பத்திரிகையான உதயன் ஊடாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.
தமிழரசுக் கட்சியின் தமிழர் விரோத செயற்பாடுகளினால் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் பெட்டிகள் நிரம்பும்வரை கள்ள மௌனம் சாதித்துவிட்டு தற்போது தனது ஊடகத்தைப் பயன்படுத்தி வழமையான தனது பிச்சைக்கார அரசியலை அரங்கேற்றுவதற்கு சரவணபவன் தயாராகியுள்ளார்.
இந்நிலையில் சரவணவனனின் நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமானது எனவும் அவர் சிங்கள ஆட்சியாளர்களுடன் பேச்சுக்களில் இடுபட்டபோது நித்திரை செய்துகொண்டிருந்தாரா என்றும் சக நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சரவணபவன் வழமையாகவே தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டுவருவதும் பின்னர் தனது பத்திரிகை ஊடாக மக்களைத் திசைதிருப்பி பிச்சைக்கார அரசியல் செய்வதும் வழமையானதே.
தனது மகளின் பிறந்தநாளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீட்டிற்கு அழைத்து கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு மறுநாள் பத்திரிகையில் யாழ் வந்த மைத்திரியின் உரையில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment