ஒதியமலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தப்பட்டது

முல்லைத்தீவு எல்லைக் கிராமமான ஒதியமலையில் இடம்பெற்ற படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது.


1984 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2ம் திகதி ஒலுமடு கிராமத்தை சுற்றிவளைத்த படையினர், கிராமத்தின் ஆண்களை அழைத்துச் சென்று படிப்பக வளாகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதில் கிராமத்தைச் சேர்ந்த 32 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இவர்கள் நினைவாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள் 32பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நடுகற்களுக்கு உறவினர்களால் சுடறேற்றி அகவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் மற்றும் வவுனியா வடக்கு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவுகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#ஒதியமலைப் படுகொலை #Othiyamalai massacre
 









No comments