சிறையில் தள்ளிய மகிந்தவிடமே நான் மன்னிப்புக் கோரி வெளிவரவில்லை

ராஜபக்ஸ என்னை சிறையில் அடைந்தபோது அவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியில் வராத நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் பதவிக்காக மன்னிப்பு கேட்பேன் என்று நினைக்கிறீர்களா என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கேள்வி ழுப்பியுளார்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது சரத் பொன்சேகா ஜனாதிபதியை மிக மோசமாக தரக்குறைவாக பேசியமை காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் பட்டியலில் அவரின் பெயரை நீக்கிய ஜனாதிபதி, தன்னிடம் மன்னிப்பு கோரினால் அமைச்சர் பதவியை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

மாவனல்லவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த கருத்தை தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ச தன்னை சிறையில் அடைத்து மன்னிப்பு கேட்க கூறியபோது தான் மறுத்ததாகவும் அதன்பின்னர் பல மில்லியன் ரூபாய்கள் தருவதாகவும் மன்னிப்பு கேட்க கூறியதாகவும் அதன்போதும் தான் மறுத்ததாகவும் தெரிவித்த அவர், அப்படிப்பட்ட நான் அமைச்சர்பதவிக்காக ஜனாதிபாதியிடம் மன்னிப்பு கேட்பேன் என்றா நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் கதைகள் பொய்யானவை என்றும் தான் இதுவரையில் வேலுப்பிள்ளை பிரபாகரனையே கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறினார்.

No comments