ரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - சம்பந்தன் அறிக்கை

தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான நானும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆவணம் ஒன்று வெளிவந்துள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த ஆவணமானது வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையை மேலே காணலாம்

No comments