ரணிலுக்கு துரோகம் செய்யமாட்டேன் - சஜித்

பிரதமர் பதவிக்காக தான், ரணில் விக்கிரமசிங்கவையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்துகமவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்.

சிறிலங்கா அதிபர், ஒக்ரோபர் 26ஆம் நாளுக்குப் பின்னர் எடுத்த அனைத்து முடிவுகளும் சட்டத்துக்கு விரோதமானவை.

அவரது இந்த முடிவுகள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

பிரதமராக பதவியேற்கும்படி, இருமுறை நான் கேட்கப்பட்டேன். ஆனால் நான் அதனை மறுத்து விட்டேன்.

அதற்காக, பிரதமராக விரும்பவில்லை என்று அர்த்தமில்லை.

நான் கட்சிக்குத் துரோகம் செய்து, எனது தந்தையின் பெயரை கெடுத்துக் கொள்ளமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments