ஐ.தேக.வுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாராகும் சு.க வின் 14 உறுப்பினர்கள்


சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­டன் இணைந்து கூட்டு அரசு அமைப்­ப­தற்­கான யோச­னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் முன்­வைத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று இரவு இடம்­பெற்­றது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­ட­னான சந்­திப்­புக்கு நேற்று நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும் அதனை இன்று வரை ஒத்தி வைத்த அரச தலை­வர், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் அவ­ச­ரச் சந்­திப்பை நடத்­தி­னார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது, மகிந்த தலை­மை­யி­லான அரசு தொடர்­பில் அதி­ருப்­தி­யில் உள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­டன் இணைந்து இடைக்­கால கூட்டு அரசு அமைப்­ப­தற்­கான யோச­னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் முன்­வைத்­துள்­ள­னர். அரச தலை­வர் இதற்கு இணக்­கம் வெளி­யி­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.

No comments