வவுனியாவில் இளைஞர் குழு மோதல் - மூவர் வைத்தியசாலையில்

வவுனியா மகாம்பைக்குளத்தில் நேற்று இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருள்களினால் தாக்கிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments