தொடங்கியது மீண்டும் மகிந்த - மைத்திரி லடாய்!


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணைந்து போட்டியிடுவதற்கு பொதுச் சின்னமொன்று அவசியமற்றது எனவும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி,  ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்கு எதிராக அணிசேரும் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். இரண்டும் இணைவதற்கான ஒரு பொதுச் சின்னம் அவசியமற்றது. பொதுஜன பெரமுனவுக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் , மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைவது குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரை பல ஜனாதிபதிகளை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவித பெருமானமும் இல்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது என்பதை பிரசன்ன ரணதுங்க எம்.பி.யின் கருத்து எடுத்துக் காட்டுவதாக விமர்சனம் எழுவது நியாயமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு, பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியின் முன்னிலையில் பேரம் பேசும் சக்தியையும் இழக்கச் செய்துள்ளது. ஒரு சாதாரண கட்சி போன்று கூட்டுச் சேரலாம் என்பது போலவும், நிபந்தனைகள் விதிப்பது பொருத்தமற்றது என்பது போலவும் அக்கட்சியின் நிலைமை தற்பொழுது மாறியுள்ளது.

எஸ்.டபிள்யு. ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் பரம்பரை மாறி, டீ.ஏ. ராஜபக்ஷ பரம்பரையின் பலமாக மலர் மொட்டு கட்சி உருப்பெற்றுள்ளது என்பது மட்டும் வெளிப்படையான ஒன்றாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பண்டாரநாயக்க குடும்ப ஆதரவு குழுவினர் தனியாக சிந்திக்கும் நிலைமை உருவாகும் என்பது தவிர்க்க முடியாதது

No comments