கோத்தாவும் வாய் திறந்தார்?


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் நன்கு கவனம் செலுத்தியிருந்திருந்தால் நாட்டிற்குள் இவ்வாறான ஒரு உறுதியற்ற நிலைமை ஏற்பட்டிருக்காது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த அரசாங்கம் என்ன செய்தாலும் அதனை கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்கும் நிலைதான் எமது நாட்டில் உள்ளது. 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதனை அமைச்சர்களாவது முழுமையாக வாசித்துள்ளார்களா? என்பது சந்தேகமானது.
இந்த நாட்டை இரண்டாக துண்டாடினாலும், பொருளாதாரத்தை சீரழித்தாலும், மத்திய வங்கியை கொள்ளையடித்தாலும் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல இடமளிக்க வேண்டும் என்பதுதான நிலைப்பாடா? அதனை யாருக்கும் தடுத்துப் பேச முடியாதா?
எமது நாட்டு வரலாற்றில் கடந்த 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு அரசாங்கம் இருந்தது. ஜூலை மாதமாகும் போது வேறு ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்டது. அதன் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட வில்லை. அரசாங்கம் மாறுவது நாட்டின் நலவுக்கே ஆகும். ஒர் அரசாங்கம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லாது போனால், மக்களுக்கு அதனை மாற்றுவதற்கான உரிமை உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அமைச்சர்களுக்கு வாய் பேச முடியாத ஒரு நிலைமைதான் காணப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கண்ணை மூடிக் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கையைத் தூக்குவதுதான் அந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் நேர்ந்திருந்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றைக் கொண்டுவருவதற்கு அப்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
அன்றிருந்த உயர் பொறுப்புக்களிலிருந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநியாயங்கள்  தொடர்பில் ஒரு அறிக்கையைத்தானும் விடுவதற்கு முன்வராததன் காரணமாக, அந்த அரசாங்கத்தில் இருந்த மனித நேயம் கொண்ட முஸ்லிமல்லாத அமைச்சர்கள் சிலரினாலாவது வாய் திறக்க முடியாது மௌனியாக வேண்டிய நிலைமை காணப்பட்டது என்பதை கடந்த அரசியல் வரலாற்றுடன் வாழ்ந்தவர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

No comments