கஞ்சாவுடன் கடற்படைச் சிப்பாய் கைது

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவா் தனது உடமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே கைது செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 27 கிராம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும் , அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

No comments