குகவரதன் கைது:மகிழ்ச்சியில் மனோ!


மனோ கணேசனின் ரணில் அடிமைத்தனத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி வந்த பொறியியலாளர் சண் குகவரதன் கைதாகியுள்ளார்.கைதாகியுள்ள அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

7 கோடி ரூபாய் காசோலை மோசடி குற்றச்சாட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதை பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அவரது அங்கத்துவத்தை நீக்குவதாக அந்த கட்சியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் அறிவித்துள்ளார்.

மனோ கணேசனின் தன்னிச்சையான செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் சுதந்திர அணியில் குகவரதன் முன்னின்று செயற்பட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments