பிரமுகர்கள் படுகொலைச் சதி - சர்வதேச பொலிஸிடம் !

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்  ஒப்படைக்க சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவர் அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்கமைய, நாமல் குமார வெளியிட்ட படுகொலைச் சதித் திட்டம் தொடர்பான ஒலிப்பதிவுகள், ஆரம்ப விசாரணை அறிக்கைகள் ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments