கண்டாவளையில் வாழ்வாராதத்தைப் புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக இழப்பை சந்தித்த கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் ஆயிரக்கணக்காண வாழ்வாதாரக் கால் நடைகள் உயிரிழந்துள்ளதாக பிரதேச செயலாளர் பிருந்தாபன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 23ம் திகதி ஏற்பட்ட அதிக வெள்ளப் பெருக்கும் காரணமாக ஆயிரத்து 315 மாடுகளும் 433 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. அதேபோன்று வாழ்வாதாரத்திற்காக 100 கோழிகள் வீதம் வழங்கப்பட்ட மக்களினதும் தொழில் முயற்சியின் பால் இறைச்சிக் கோழிக்காக வளர்க்கப்பட்ட 4 பெரிய கூடுகளுமாக மொத்தம் 10 ஆயிரம் கோழியும் உயிரிழந்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்த கால் நடைகளில் பலவற்றை நம்பியே பல பெண் தலமைத்துவக் குடும்பங்களும் பல குடும்பங்களும் வாழ்ந்த நிலையில் உயிரிழந்த கால் நடைகளை அப்புறப்படுத்துவதற்கும் அதிக பணச் செலவை எதிர்கொள்ளும் நிலமை கானப்பட்டது.

இதேநேரம் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவினில் 30 வீடுகள் முழுமையாகவும் 251 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. எனத் தெரிவித்தார்.

No comments