முல்லைத்தீவில் கிருமி தொற்றால் சிறுமி பரிதாப பலி

முல்லைத்தீவு, முத்துஜயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

முத்தையன்கட்டு, இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த சந்திரபாலன் சானுஜா என்ற சிறுமியே நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் மரணத்துக்குக் கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments