கொம்பு முளைத்த மைத்திரி:ஜேவிபி?


சுதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மிக மோசமான ஒரு நிலையாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனது கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லை. ஆனால், தன்னை நோக்கி வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குகின்றார். இது சிறந்த அரசியல் நடவடிக்கை அல்ல. ஜனாதிபதிப் பதவி தனிப்பட்ட நலன்களுக்கு அல்லவெனவும், நாட்டின் நலனுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய பதவி கிடைத்தவுடன் சிலருக்கு இரு கொம்புகள் முளைக்கின்றன. ஜனாதிபதி தான் இங்கிலாந்தின் பங்கிங்ஹெம் மாளிகையில் ஒருவர் போன்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார் எனவும் பிமல் ரத்நாயக்க எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments