யானையின் மேல் சிறகுவிரிக்கத் தயாராகிறது தொண்டாவின் சேவல்

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.


இதற்காக ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஐ.தே.க. தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்படும்பட்சத்தில் முதற்கட்டமாக ஒரு உறுப்பினர் மாத்திரமே ‘பல்டி’யடிப்பார் என்றும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இணைத்துக்கொள்வதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.  எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியுள்ள ஏனைய இருகட்சிகளும் இதுவிடயத்தில் நடுநிலை வகிக்கின்றன.  எனவே, திகா தரப்பை சமரசப்படுத்தும் முயற்சியில் ராஜித சேனாரத்ன இறங்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இதுதொடர்பில் இ.தொ.கா. தரப்பிலிருந்து இன்னும் எவ்வித தகவல்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

No comments