45 ஏக்கர் காணி விடுவிப்பு

இராணுவத்தினரின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சொந்தமான 39.95 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சொந்தமான 5.33 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 45.28 ஏக்கர் காணிகள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சேவைகள் மத்திய நிலையத்தில் வைத்து கிளிநொச்சிப் படைகளின் கட்டளைத் தளபதியால் இரு மாவட்ட அரச அதிபர்களிடமும் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரச காணி மற்றும் பத்து தனியார் காணிகளும், கண்டாவளை பிரதேச செயலர் பகுதிக்குட்பட்ட பகுதியில் இரண்டு தனியார் காணிகளும் அடங்கலாக 39.95 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பகுதிக்குட்பட்ட பகுதியில் இரண்டு தனியார் காணிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பகுதிக்குட்பட்ட பகுதியில் ஓர் தனியார் காணியும் அடங்கலாக 5.33 ஏக்கர் காணிகளுமே நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரண்டு மாவட்ட அரச அதிபர்களும் குறித்த காணிகள் எவை என அடையாளப்படுத்தப்பட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளன எனவும், ஜனாதிபதியின் பணிப்புக்கமையவே இக்காணிகள் விடுவிக்கப்படுள்ளன எனவும், விடுவிக்கப்பட்ட காணிகள் யாருடையது என ஆராய்ந்து அவர்களை மாவட்ட செயலத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

No comments