அங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே!


மைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளாராம். இரணைமடுகுளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இரணைமடு புனரமைக்கப்பட்டு 1954ம் ஆண்டு; பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. 

அண்மையில் ஜனாதிபதி மைத்திரியின் வருகைக்கு முன்பதாக குறித்த நினைவுக்கல் அங்கயனின் உத்தரவுக்கு அமைய இடித்து அகற்றப்பட்டமை தொடர்பான செய்தி ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து விரைவாக குறித்த நினைவு கல்லினை மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு ஆளுநர் பணித்துள்ளாராம்.

இதன் பணிகளை எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடமாகாண ஆளுநருக்கும் அங்கயனிற்குமிடையேயான பனிப்போர் உச்சமடைந்துள்ளது. 

No comments