ஆமி மாமா வேண்டுமாம்: முளைக்கின்றது பிரசுரங்கள்?


தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட இனஅழிப்பு  மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டிய இலங்கை இராணுவத்தை தமிழ் தாயகத்தில் நிலைநிறுத்த முழு அளவில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் பின்னர் வன்னியில் ஒரு இலட்சம் வரையிலான இனஅழிப்பு இராணுவத்தினர் நிலைகொள்ள வைக்கப்பபட்டுள்ளனர்.

அண்மைய வெள்ள அனர்த்ததின் போது இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

உலகளாவிய ரீதியில் இவ்வாறு படைகள் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமையாகும்.

ஆனால் அதனை முன்னிறுத்தி இராணுவம் தொடர்ந்தும் வன்னியில் தங்கியிருக்க வேண்டுமென கோரி அநாமதேய துண்டுபிரசுரங்கள்,பேனர்கள் வன்னியில் முளைத்துள்ளன.இதன் பின்னணியில் இராணுவபுலனாய்வு கட்டமைப்புள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.அதிலும் இராணுவத்தின் பேரில் இத்தகைய  பிரச்சாரங்கள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினை அவர்கள் நினைவுகூருகின்றனர். 

இலங்கையில் இராணுவம் உட்பட அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள், சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் படைகளது வெளியேற்றம் முக்கியமாகின்றது.

இதனிடையே படையினரது நிலைகொள்ளலை வலுப்படுத்துவதில் வடமாகாண ஆளுநர் கூரே முன்னின்று செயற்பட்டுவருகின்றார்.

யாழ்.மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் இராணுவ பங்குபற்றலுடனான வேலை திட்டங்களை நிராகரித்துள்ளதுடன் இதனை தீர்மானமாகவும் அமுல்படுத்தியுள்ளனர்.ஆனால் கூட்டமைப்பு சார்பு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோர் படையினருடான நிகழ்வுகளில் தொடர்ந்தும் முன்வரிசையில் பங்கெடுத்துவருவது தெரிந்ததே. 

No comments