கிளிநொச்சி,முல்லைதீவு சேத இழப்பீடு 300கோடி?


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த சேதம் சுமார் 300 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்களிற்கான மாதாந்த கலந்துரைநாடல் நேற்றைய தினம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இரு மாவட்டத்திற்குத் தேவையான சகல தரவுகளையும் அமைச்சு ரீதியில் கோரிப் பெற்றுக்கொண்டதோடு உடனடியாக மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலையும் இன்றுவரை கிடைக்கப்பட்டதன் அடிப்படையில் அவற்றினை நிறைவு செய்ய 300 கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வெள்ள பாதிப்பு கோரிக்கையினை முன்வைத்தால் உடனடியாக அதனை விடுவிக்க தயாராக இருப்பதாக அறிவித்த ரணில் அரசு தற்போது அவற்றினை வரவு செலவுத்திட்டத்தின்(பாதீட்டின்) மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளது.ஏற்கனவே கொழும்பு அரசியல் குழப்பங்களால் தற்காலிக வரவு செலவு திட்டத்தையே அரசு சமர்ப்பிக்கவுள்ளது.

இதனால் தற்போதைய நிலையில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் கூட நான்கு மாதங்களின் பின்னரே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் உடனடித் தேவைகளிற்காக சமைத்த உணவும்  இரு வாரங்களிற்கான உலர்உணவு நிவாரணங்களிற்கான நிதியுமே அரசினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 



No comments