தனது செயலாளர் ஊடாக வடக்கு அபிவிருத்தி அமைச்சை நிர்வகிக்கும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஆபிரகாம் சுமந்திரனின் செயலாளரே வடக்கு அிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளை நிர்வகிப்பதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் நேரடியாக அமைச்சுப் பதவியினைப் பெற்றால் அமைச்சுப் பதவிக்காகவே ரணில் விக்கிமரசிங்கவை ஆதரித்ததாக தமிழ் மக்கள் மத்தியில் தனக்கு எதிரான எதிர்ப்பலைகள் மேலும் அதிகரிக்கும் என அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே வடக்கு அபிவிருத்தி அமைச்சினை வேறு நபர்களுக்குக் கொடுக்காது தன்வசம் வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனின் ஆலோசனையுடன் சுமந்திரனின் செயலாளர் ஊடாக குறித்த அமைச்சின் நடவடிக்கைகளை கையாண்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் சட்டத்துறையுடன் போராடிய சுமந்திரன், ரணிலுக்கு பிரதமர் பதவியையும் ஆட்சியை பெற்றுக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அமைச்சு பதவியை வழங்கப்பட்ட தெரிய வருகிறது.

இது தொடர்பில் சுமந்திரனே வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிழல் அமைச்சர் என பதிவு முன்னர் அம்பலப்படுத்தியிருந்தது.

No comments