அரியநேத்திரனிற்கு குடைச்சலாம்?


மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன்  கொழும்பு குற்றப்புலானாய்வு பொலிசார் மட்டக்களப்பில் அழைத்து மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த மாவீரர் தினம் (27/12/2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் தாண்டியடி துயிலும் இல்லங்களுக்கு அரியநேத்திரன் மாவீரர் நாள் அதற்குமுந்திய தினங்களில் எத்தனை தடவைகள் அங்கு சென்றதாகவும் குறிப்பாக தாண்டியடி துயிலும் இல்லத்தின் பக்கமாக தாண்டியடி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நினைவு நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
மாவீரர் நாள் முடிந்து மறுநாள் வவுணதீவு பொலிஷ்நிலையத்தில் கடமைபுரிந்த இரண்டு  காவல்துறை உத்தியோகத்தர் படுகொலை தொடர்பாக கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் பல்வேறுபட்ட வர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கி இருந்து கடந்த ஒருமாதமாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.
கடந்த 22/12/2018,சனிக்கிழமை இந்த விசாரணை இடம்பெற்றது. மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த பலவருடங்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் நேரடியாகசென்று தனியாகவும் வேறு பொதுமக்களுடனும் இணைந்தும்  தவறாமல் மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கேற்றி வணக்கநிகழ்வுகளை நடத்திவருவது வழமையாகும்.
இந்த வருடமும் வழமைபோன்று மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை பல பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட நிலையில் மாவீரர் தினத்திக்கு முதன்நாளான 26/12/2018, கொக்கட்டிச்சோலை பொலிசார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதியால் பா.அரியநேத்திரனுக்கு எதிராக மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் புலிக்கொடி ஏற்றுதல்,விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த பதாதைகளை கட்டுதல் நினைவு சின்னங்களை நடுதல் விடுதலைப்புலிகளின் பாடல்களை ஒலிபரப்பு செய்தல் என்பவற்றை தடைசெய்யும் நீதிமன்ற கட்டளை இவருக்கு எதிராக வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்ற கட்டளையை மதித்து மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரன் முன்னின்று இந்தவருடமும் வெகு சிறப்பாக மாவீரர் வணக்க நிகழ்வ இடம்பெற்றிருந்தது.
வவுணதீவு பொலிசார் படு கொலை சம்பவத்தை சாட்டாகவைத்து இவ்வாறு தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மீதும் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் மீதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிசார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த குற்றப்புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
 இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு ஒருமாதம் நிறைவுறும் நிலையில் அந்த கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பொலிசாரின் துப்பாக்கிகள் இதுவரை கண்டு பிடிக்கவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.

No comments