வந்தது நாமல்குமாரவின் அழிக்கப்பட்ட ஒலிப்பதிவு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக ஹொங்கொங் இற்கு அனுப்பிய ஊழலுக்கு எதிரான முன்னணியில் பணிப்பாளர் நாமல் குமாரவின் தொலைபேசியுடன் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இரவு மூவரடங்கிய குழுவினர் ஹொங்கொங் நோக்கிச் சென்றிருந்தனர்.
இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments