இலங்கையின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும்?


கொழும்பு அரசியலில் புதிய அமைச்சரவை தொடர்பில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.இதன் பிரகாரம் நாளை வியாழக்கிழமை காலை 8.30கு அமைச்சரவை பதவி ஏற்குமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையின் நிதி அமைச்சர் தொடர்பில் நிலவிய குழப்பம் தீர்க்கப்பட்டு ரவி கருணாநாயக்க சக்திவளத்துறை அமைச்சராகவும் மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளனர்.

வசந்த சேனாநாயக்க சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,மனோகணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு ஏலவே வகித்த அமைச்சுபதவிகளையும் ஏற்கவுள்ளனர்.

இதனிடையே அமைச்சரவை குழப்பத்தை தவிர்க்க மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவியேற்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments