மீனவர்கள் மீது கோத்தாபாய பிரிவு கல்வீச்சுத் தாக்குதல்

முல்லைத்தீவு- வட்டுவாகல் கடல் நீரோியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மீனவா்கள் மீது கோட்டபாய கடற்படைமுகாமில் உள்ள கடற்படையினா் கல் வீசி தாக்குதல் நடாத்துவதாக மீன வா்கள் கண்ணீா்மல்க கூறியுள்ளனா்.

வட்டுவாகல் கடல்நீரோியில் மீன்பிடி தொழிலை நம்பி பெருமளவு மீனவா்கள் வாழ்ந்து வரும் நி லையில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவா்கள் மீது கடற்படையினா் தொடா்ச்சி யாக தாக்குதல்களை நடாத்திவருகின்றனா்.

வட்டுவாகல் கடல்நீரோியின் ஒரு பக்கத்தில் கடற்படையினாின் கோட்டாபாய கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமிற்கு அருகாக உள்ள கடல் நீரோியில் இறங்குவதற்கு மீனவா்களுக்கு கடற்படையினா் தடைவிதித்துள்ளனா்.

இதனால் மீனவா்கள் அந்த பகுதிக்கு செல்லாது அதற்கு சற்று துாரத்தில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவா்கள் மீதும் கடற்படையினா் கல் வீசி இன்றும் தாக்குதல் நடா த்தியுள்ளனா். இதனால் மீனவா்கள் கடலில் இறங்குவதற்கே

அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். முன்னதாகவே இந்த மீனவா்கள் வாழ்வாதாரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான தாக்குதல்களால் அது மேலும் மோசமாகும் நிலையில் பொறுப்புவாய்ந்தவா்கள் இந்த விடயத்தை

கவனத்தில் கொள்ளுமாறு மீனவா்கள் கேட்டுள்ளனா்.

No comments