ரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி!


இலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இராணுவக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ரணிலிற்கு மீண்டும் பிரதமர் பதவியை மீள வழங்கும் நிகழவிற்கு திட்டமிடப்படடிருந்த போதும் மைத்திரி படையினரது முக்கிய நிகழ்வில் பங்கெடுப்பதை சுட்டிக்காட்டி நாளை அதனை பிற்போட்டிருந்தார்.

அவர் இன்று பங்கெடுத்த நிகழ்வு சீன தூதர் பங்கெடுத்த இராணுவ நலனசார்ந்த நிகழ்வு என்பது தெரியவந்துள்ளது.

ரணில் இந்திய மற்றும் மேற்குலக நிகழ்ச்சி நிரலில் திரிய மைத்திரியோ சீனாவின் ஆசீர்வாதத்துடன் இருப்பதை இன்றைய நிகழ்வு மூலம் வெளியுலகிற்கு சொல்லியுள்ளார்.   

No comments