பளைப் பகுதியில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வாள்களும் மீட்கப்பட்டன என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

“பளை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் சென்று போது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பலை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

இதன்போதே கும்பலைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments