வடக்கு கிழக்கில் பருவமழை - ஓரிரு தினங்களுக்கு தெரடச்சியாக பெய்யும்

காற்றழுத்த தாழமுக்கத்தின் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவ மழை ஓரிரு நிறைவுக்கு வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அதனால் இன்று இரவு முதல் நாளை இரவுவரை இலங்கை, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகவில் மழையுடனான காலநிலை தொடரும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடக்கு – கிழக்கு வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில தினங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் மழைவீழ்ச்சி மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments