கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (21) மாலை 06.00 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்டுள்ளனர்.  இதன்போதே விஜயகலா மகேஸ்வரன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 29 பேர் நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த கடந்த அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பதவி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments