அனுரகுமாரவுக்கு பிரதமர் பதவி - குழப்பத்தை ஏற்படுத்திய ருவிற்றர்


சிறிலங்கா பிரதமராக அனுரகுமார திசநாயக்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று நேற்றிரவு சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.

பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் அஸ்ஸம் அமீனின் கீச்சகப் பதிவு போன்று, இந்தப் போலிச் செய்தி, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

ஊடகவியலாளர் அஸ்ஸம் அமீனின், கீச்சக முகப்புப் படத்தை பயன்படுத்தி இந்தப் போலிச் செய்தி வெளியாகியது.

எனினும், இது தனது கீச்சகப் பதிவில் இருந்து வெளியிடப்படவில்லை என்றும், இது போலியான செய்தி எனவும், அஸ்ஸம் அமீன் பதிவிட்டுள்ளார்.

No comments