கருஜெயசூரியவிற்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்!


சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருஜெயசூரியாவை காட்டி தென்பகுதியில் ஜக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சியாகவே இதனை அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர்.

குறிப்பாக முன்னைய காலங்களில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வெளியிடும் சுவரொட்டிகள் பாணியில் இவை ஒட்டப்பட்டுள்ளன.அதிலும் தமிழில் அச்சிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம்,நகரப்பகுதிகளை இலக்கு வைத்து பெருமளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

No comments