ஜூன் மாதத்துக்குப் பின்னர் பொதுத்தேர்தல்?


ஜூன் மாதத்துக்குப் பின்னர் பொதுத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.
சபாநாயகருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் தொழிற்சங்கங்கள் சில முறைப்பாடு செய்திருக்கின்றன.
சம்பந்தன், மனோகணேசன் ஆகியோரும் இன்னும் சில சிறுபான்மை கட்சி தலைவர்களும் நாளை மாலை ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அவரை சந்திக்கவுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஜனாதிபதி இன்னும் எந்த அறிவிப்பையும் விடுக்காத நிலையில், வரும் திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் அவரால் முக்கிய அறிவிப்பு வெளியாக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
கொழும்பில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் ராஜதந்திரிகள், நேற்றும் இன்று(17) காலையும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்கள்.....
ஜனாதிபதி இன்று கொழும்பிற்கு வெளியில் இருந்ததால், கட்சி சந்திப்புகள் எதனையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மகிந்தவிற்கு திங்கட்கிழமை வரையில் ஜனாதிபதி கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும், அதற்குள் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் மங்கள சமரவீர எம்.பி கூறுகிறார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை விலைக்கு வாங்க 3 மில்லியன் டொலர் பணத்துடன் யோசித்த ராஜபக்‌ஷ தூது சென்றதாகவும் குற்றம் சுமத்தினார்.
ஆனால் இதனை மறுத்துள்ள யோசித்த ராஜபக்‌ஷ, தாம் தற்போது இடம்பெறும் ரக்பி தொடரிலேயே அவதானமாக இருப்பதாகவும், தம்மை இந்த அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என்றும் பதிலளித்துள்ளா

No comments