அபிவிருத்தி அரசியல்:கூட்டமைப்பின் புதிய பாதை!


வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுமதியுடனேயே நடைபெறும் என ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது,புதிய அரசியல் யாப்பு ஒன்றை நிறைவேற்றுவது, தமிழர்களின் காணிகளை விடுவிடுப்பது,தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்வது போன்றவிடயங்களை நிறைவேற்றுவதாக தமக்கு ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ருணிலின் ஜக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பகிரங்க ஆதரவை வழங்கியுள்ளது.இவ்விவகாரம் தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பில் பதிலளிக்கையிலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுமதியுடனேயே நடைபெறும் என ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ரணில் தரப்பின் வரவு செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவளித்த போது பத்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் அவ்வாறு உறுதி மொழியேதும் வழங்கப்படவில்லையென ரணில் அப்போது மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments